அதிமுக ஐடி விங் டு தவெக: மாஜி அமைச்சர் மகன் அதிர்ச்சி | Lokesh Tamilselvan | Dhanapal |TVK
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ தனபால். அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்துள்ளார். கடந்த 1977, 1980, 1984, 2001 தேர்தல்களில் சங்ககிரி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001ல், அமைச்சராக இருந்தார். பின், ஜெயலலிதா ஆட்சியில் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த, 2016 மற்றும், 2021 தேர்தலில் அவிநாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது, 7வது முறையாக எம்.எல்.ஏ.,வாக உள்ளார். அவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க., - ஐ.டி., அணியில் இருந்தார். கடந்த லோக்சபா தேர்தலில், நீலகிரி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு மூன்றாமிடம் பெற்று தோல்வியடைந்தார். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், இவர் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, த.வெ.க.,வில் இணைந்துள்ளார். இது, தனபாலுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.