உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இத பார்த்ததில்ல! லாஸ் ஏஞ்சல்ஸில் பயங்கர தீ Los Angels fire | sunset fire video | california wildfire

இத பார்த்ததில்ல! லாஸ் ஏஞ்சல்ஸில் பயங்கர தீ Los Angels fire | sunset fire video | california wildfire

லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 2 நாட்களாக கொழுந்து விட்டு எரியும் பயங்கர காட்டுத்தீ அமெரிக்காவை உலுக்கிப்போட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம். அழகிய கடற்கரை மற்றும் காடுகள் நிறைந்த நகரம். ஹாலிவுட்டின் அடிநாதமாக இருப்பதும் லாஸ் ஏஞ்சல்ஸ் தான். அமெரிக்காவின் சினிமா மற்றும் டிவி தொழில் முழுக்க முழுக்க இந்த நகரை சார்ந்தே இயங்குகிறது. ஹாலிவுட் சூட்டிங் செட், ஹாலிவுட் திரை பிரபலங்கள் வீடு, ஹாலிவுட் சினிமா சின்னம் அதிகம் உள்ள இடமும் இதுதான். இவ்வளவு பிரபலமான இடத்தில் 2 நாட்கள் முன்பு திடீரென பயங்கர காட்டு தீ பற்றியது. முதலில் கடற்கரையை ஒட்டிய காட்டில் தீப்பிடித்தது. காற்றின் வேகம் அதிகரித்ததால், நகரை நோக்கி மின்னல் வேகத்தில் தீ பரவியது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் என 6 இடத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. நகரின் குடியிருப்பு பகுதிக்குள்ளும் தீ பரவியது.

ஜன 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை