உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உயிருடன் எரிந்த இளசுகள்; பரபரப்பு சம்பவத்தின் பின்னணி | LoversDeath | Medchal Malkajgiri District

உயிருடன் எரிந்த இளசுகள்; பரபரப்பு சம்பவத்தின் பின்னணி | LoversDeath | Medchal Malkajgiri District

தெலங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டம், கான்பூர் சர்வீஸ் சாலை ஓரத்தில் நேற்று மாலை ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த இளைஞர், இளம் பெண் தீயில் கருகி இறந்தனர். கார் இன்ஜின் தீப்பிடித்ததால் எரிந்ததாக நம்பப்பட்டது. இறந்தவர்கள், யாதாத்ரி புவனகிரி மாவட்டம், பீபிநகர் Bibinagar மண்டலத்தை சேர்ந்த 25 வயது ஸ்ரீராமுலு மற்றும் 17 வயது மாணவி என்பது தெரிந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. கார் எரிந்தது விபத்து அல்ல என்பதும், அவர்களாகவே தீ வைத்து கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்ரீராமுலு சைக்கிள் கடை நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்த மைனர் மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்தது, மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. ஸ்ரீராமுலுவை பலமுறை கண்டித்தும், தாக்கியும் உள்ளனர். அதன் பின்னரும் இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்தித்து வந்தனர். மாணவியின் நெருங்கிய உறவினர் சிண்டுக்கு இது தெரியவந்தது. மாணவியின் பெற்றோரிடம் இதை சொல்லிவிடுவதாக மிரட்டி ஸ்ரீராமுலுவை அடிக்கடி பணம் பறித்தார். மாணவியின் பெற்றோருக்கு தெரிந்தால் பிரச்னை பெரிதாகிவிடும் என பயந்த ஸ்ரீராமுலு பல தவணைகளில் 1.35 லட்சம் ரூபாய் வரை சிண்டுவுக்கு கொடுத்துள்ளார். இச்சூழலில்தான் ஸ்ரீராமுலுவும், மாணவியும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். மெடிப்பள்ளியில் உள்ள செல்ஃப் டிரைவ் நிறுவனத்தில் காரை வாடகைக்கு எடுத்துள்ளார். கான்பூர் புறநகர் சாலையில் நிறுத்திவிட்டு, ஏற்கனவே வாங்கி வந்திருந்த பெட்ரோலை காரில் இருந்தபடி உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தற்கொலை செய்யும் முன்பு, ஸ்ரீராமுலு வீட்டில் கடிதம் எழுதி வைத்து வந்துள்ளார். அதில், காதலுக்கு எதிர்ப்பாலும், பணம் கேட்டு மிரட்டுவதாலும் மன உளைச்சலில் இந்த முடிவு எடுப்பதாக எழுதியிருந்தது. இதை அறிந்த மாணவியின் குடும்பத்தினர், பணம் கேட்டு மிரட்டிய சிண்டுவின் வீட்டுக்கு சென்று தாக்குதல் நடத்தினர். ஆனால் சிண்டு அங்கு இல்லை. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜன 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ