உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்! 112nd Maan ki Baath | Radio Program | Modi

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்! 112nd Maan ki Baath | Radio Program | Modi

112வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசினார். இன்று உலகத்தின் கவனம் பாரிஸ் ஒலிம்பிக்கில் உள்ளது. இதன் மூலம் நமது வீரர்கள் மூவர்ண கொடியை பறக்கவிட்டு அதை உலக அளவில் எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. நீங்களும் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். சில தினங்களுக்கு முன்பு சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளும் நடந்தன. 100 நாடுகளின் இளைஞர்கள் பங்கேற்ற ஒலிம்பியாட் போட்டிகளில் நமது நாடு முதல் ஐந்து இடங்களுக்குள் வந்து இருக்கிறது. அசாமின் சரடே மொய்டாம் (Charade Moi dam )பகுதி யுனெஸ்கோவின் பாரம்பரிய இடமாக சேர்க்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பகுதியில் முதலாவதாகவும், இந்தியாவில் 43வது யுனெஸ்கோ பாரம்பரிய இடமாகவும் இந்த இடம் மாறி இருக்கிறது. சரடே என்றால் குன்றில் ஒளிரும் நகரம் என்று பொருள். இந்த இடம் உலக அளவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்.

ஜூலை 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை