உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கட்டுமானம் தாமதம் ஏன்?: விளக்கம் சொன்னார் நட்டா madurai aiims| mp raja| JP nadda

கட்டுமானம் தாமதம் ஏன்?: விளக்கம் சொன்னார் நட்டா madurai aiims| mp raja| JP nadda

மதுரை எய்ம்ஸ் எப்போ வரும்? லோக்சபாவில் அமைச்சர் பதில்! மதுரை எய்ம்ஸ் தொடர்பாக லோக்சபாவில் நீலகிரி எம்பி ஆ ராஜா கேள்வி எழுப்பினார். ஜப்பான் அரசு நிதி உதவியுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று 4 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. இன்னும் அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக நிதியமைச்சர் சொல்கிறார். ஆனால், இதுவரை ஒரு செங்கல் கூட நடப்படவில்லை. இது தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டார். மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா இதற்கு பதில் அளித்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கட்டுமானம் தொடங்குவதில் காலத்தாமதம் ஏற்படுவதை ஒப்புக்கொள்கிறோம். சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த தாமதம் ஏற்படுகிறது.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை