உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறாத மகா விகாஸ் அகாடி கூட்டணி | Maharashtra assemly election | Mahayudhi

எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறாத மகா விகாஸ் அகாடி கூட்டணி | Maharashtra assemly election | Mahayudhi

மகாவை அதிர வைத்த மஹாயுதி கூட்டணி வெற்றி! பின்னணியில் 5 காரணங்கள் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜ, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மஹாயுதி கூட்டணி 234 இடங்களில் அபார வெற்றி பெற்றது. இதில் பாஜ மட்டும் 132 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக நிற்கிறது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சரத் பவார் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி வெறும் 50 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. சட்ட விதிகளின்படி சட்டசபையின் மொத்த தொகுதியில் 10 சதவீத இடங்களை பெறும் கட்சிக்கே எதிர்கட்சி அந்தஸ்தும், எதிர்கட்சி தலைவர் பதவியும் வழங்கப்படும். ஆனால் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் எந்த கட்சியும் 29 இடங்களை பெறாததால் அவர்களில் யாருக்கும் எதிர்கட்சி அந்தஸ்து கிடைக்காது. தங்கள் எதிரணிக்கு எதிர்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவுக்கு பாஜ கூட்டணி இப்படி ஒரு இமாலய வெற்றி பெற 5 முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது 2019 தேர்தலைவிட, இந்த முறை 53 லட்சம் பெண்கள் கூடுதலாக ஓட்டளித்தனர். அவர்களின் ஓட்டு முந்தைய தேர்தலைவிட 6 சதவீதம் அதிகரித்தது. லட்கி பெஹன் யோஜனா திட்டத்தின் கீழ், கடந்த ஐந்து மாதங்களில், 2.5 கோடி பெண்களுக்கு மாதந்தோறும், 1,500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இது 2,100 ரூபாயாக உயர்த்தி தரப்படும் என தேர்தல் அறிக்கையில் பா.ஜ., அறிவித்துள்ளது.

நவ 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை