பாஜவில் மட்டும் அதிகபட்சமாக 14 பெண் MLA | Maharashtra Assembly | BJP | Shiv Sena | NCP
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜ, சிவசேனா, தேசியவாத காங்கிரசை சேர்ந்த ஆளும் தேஜ கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்கவைத்து உள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 21 பெண்கள் சட்டசபைக்கு தேர்வாகி உள்ளனர். இதில் ஆளும் கூட்டணியில் உள்ள பாஜவில் அதிகபட்சமாக 14 பெண் எம்எல்ஏக்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 10 பேர் மீண்டும் தேர்வாகியுள்ளனர். போகர் தொகுதிக்கு ஸ்ரீ ஜெய சவான், கல்யான் கிழக்கில் சுலபா கெய்க்வாட், வசாய்க்கு ஸ்நேகா பண்டிட், புலம்பரிக்கு அனுராதா சவான் ஆகிய நால்வர் புதிதாக தேர்வான பாஜ பெண் எம்எல்ஏக்கள். ஆளும் கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான சிவசேனாவில், சக்ரா தொகுதியில் இருந்து மஞ்சுளா கவித், கன்னட் தொகுதியில் சஞ்சனா ஜாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேசியவாத காங்கிரசில், அமராவதியில் இருந்து சுல்பா கோட்கே, டியோலாலியில் சரோஜ் அதிரே, அணுசக்தி நகரில் சனா மாலிக், ஸ்ரீவர்தன் தொகுதியில் இருந்து அதிதி தாக்கரேவும் தேர்வாகியுள்ளனர். தாராவி தொகுதிக்கு எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரசில் இருந்து ஜோதி கெய்க்வாட் தேர்வாகி உள்ளார்.