உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல் ஆளாக வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பாஜ! | Maharashtra Election 2024 | BJP | 99 Candidates

முதல் ஆளாக வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பாஜ! | Maharashtra Election 2024 | BJP | 99 Candidates

மகாராஷ்டிராவில் 288 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கு நவம்பர் 20ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜ, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணி மீண்டும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கின்றன. மற்றொருபுறம் உத்தவ்வின் சிவசேனா, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒரு அணியாக இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றன. பாஜ கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முடிவாகவில்லை. 22ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்க உள்ள நிலையில், 99 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜ வெளியிட்டது. அதில் 13 பெண் பெண்கள். வேட்பாளர் அறிவிக்கப்பட்ட தொகுதிகள் அனைத்தும் கடந்த முறை பாஜ வெற்றி பெற்றவை. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 151 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறது. துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியிலும், மாநில பாஜ தலைவர் சந்திரசேகர் கிருஷ்ணராவ் காம்தி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ராஜேஷ் உடேன்சிங் பட்வி ஷஹாடே தொகுதியிலும், துலே நகர் தொகுதியில் அனுப் அகர்வால் ஆகியோரும் களம் காண்கின்றனர். சயான் கோலிவாடாவில் தமிழரான தமிழ்செல்வத்திற்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. சமீபத்தில் பாஜவில் சேர்ந்த முன்னாள் முதல்வர் அசோக் சவானின் மகள் ஸ்ரீஜெயா போகார் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ