/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திரிணமுல் காங்கிரஸ் உட்கட்சி மோதலை சாதகமாக்க பாஜ திட்டம் | Mamata Banerjee | Trinamool Congress
திரிணமுல் காங்கிரஸ் உட்கட்சி மோதலை சாதகமாக்க பாஜ திட்டம் | Mamata Banerjee | Trinamool Congress
மம்தா - அபிஷேக் பனிப்போர் ஆட்டம் காணும் திரிணமுல் காங். மேற்கு வங்கத்தில் பரபரப்பு மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் பொதுச்செயலரும், எம்.பி.,யுமாக இருப்பவர் அபிஷேக் பானர்ஜி. சகோதரரின் மகனான அவரை, தன் அரசியல் வாரிசாக மறைமுகமாக அறிவித்த மம்தா, அவருக்கு முக்கிய பதவிகளை அளித்ததுடன், தேசிய அரசியலிலும் அவரை முன்னிலைப்படுத்தினார். ஆனால், சமீப காலமாக இருவருக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவுகிறது. கட்சியில் மம்தாவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் அபிஷேக்குக்கு ஆதரவாக சில திரிணமுல் காங்., எம்.எல்.ஏ.,க்களும், நிர்வாகிகளும் செயல்படுகின்றனர்.
டிச 15, 2024