எஸ்ஐஆர் நடைமுறைக்கு மம்தா எதிர்ப்பு: தேர்தல் கமிஷனுக்கு எதிராக மீண்டும் கோர்ட் செல்ல திட்டம்
Mamata Banerjee Challenges ECI on SIR #Mamata Banerjee #Mamata #TMC #Westbengalelection #WB #SIR #SpecialIntensiveRevision #SupremeCourt #Modi #BJP #VotersList நாடு முழுதும் நடத்தப்படும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணியில் போலி வாக்காளர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு செய்தோர் பெயர்கள் நீக்கப்படுகின்றன. அந்த வகையில், மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட எஸ்ஐஆர் பணியின் முடிவில், 91 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட் வரை சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் கமிஷனின் பணிகளை கடுமையாக விமர்சித்துள்ளார். எஸ்ஐஆர் என்ற பெயரில், திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்களின் ஓட்டுகளை நீக்கும் நடவடிக்கை நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடி நடப்பதாக திரிணாமுல் காங்கிரசும், தங்களுக்கு மாநில அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக தேர்தல் கமிஷனும் மாறி மாறி குற்றம்சாட்டின. இதையடுத்து, எஸ்ஐஆர் பணிகளை ஐகோர்ட் நீதிபதிகள் குழு பார்வையிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தேர்தல் பணியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு கோர்ட் கண்டனம் தெரிவித்ததுடன், மாநில அரசின் மெத்தன போக்கையும் கடுமையாக விமர்சித்தது.