உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மேகதாது அணையால் யாருக்கு அதிக பலன் | Mekedatu dam project | CM Siddaramaiah | CM Mk stalin

மேகதாது அணையால் யாருக்கு அதிக பலன் | Mekedatu dam project | CM Siddaramaiah | CM Mk stalin

மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார் தூதுவிடும் சித்தராமையா கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை ஒரு மாதமாக கொட்டித் தீர்ப்பதால் அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 1.30 லட்சம் கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. கபினியில் இருந்து 30,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் ஒரேயடியாக தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டிருப்பதால் ஒகேனக்கல்லில் பெருவெள்ளம் பாய்ந்து மேட்டூருக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுடன் விவாதிக்க கர்நாடக அரசு தயாராக இருப்பதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை