கோவை, மதுரை மெட்ரோ சர்ச்சை: அம்பலப்பட்ட அரசின் குட்டு | Metro Rejection | DMK Blame Game
சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட சில நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. மதுரையில் 11,360 கோடி ரூபாயிலும், கோவையில் 10,740 கோடி ரூபாயிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. கடந்த ஆண்டு, கூடுதல் ஆவணங்களை இணைத்து அனுப்புமாறு, திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. அதன் அடிப்படையில், கூடுதல் ஆவணங்களுடன், திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கடந்த ஆண்டு நவம்பரில் தமிழக அரசு அனுப்பியது. இந்த இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் ஒப்புதல் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், நிலம் கையகப்படுத்துவது போன்ற அடுத்தகட்ட பணிகளையும் தமிழக அரசு துவக்கியது.