உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஊராட்சி மன்ற தலைவியின் கணவரை நோஸ் கட் செய்த பொன்முடி | Minister Ponmudi | Grama sabha meeting

ஊராட்சி மன்ற தலைவியின் கணவரை நோஸ் கட் செய்த பொன்முடி | Minister Ponmudi | Grama sabha meeting

விழுப்புரம் அருகே உள்ள வி.புத்தூர் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. திருக்கோவிலூர் எம்எல்ஏவும், வனத்துறை அமைச்சருமான பொன்முடி பங்கேற்றார். ஊராட்சியின் கணக்கு வழக்குகள் குறித்தும், 18 வகையான முக்கிய தேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பொதுவான குறைகள் இருந்தால் கூறும்படி அமைச்சர் பொன்முடி மக்களிடம் கேட்டுக்கொண்டார். அப்போது, வி.புத்தூர் ஊராட்சி மன்ற தலைவி பூர்ணிமாவின் கணவரும் திமுகவை சேர்ந்தவருமான சிவராஜ், தண்ணீர் பிரச்னை பற்றி பேச முன் வந்தார். ஏற்கனவே அதற்கு தீர்வு சொல்லிவிட்டதாக அமைச்சர் சொன்ன பிறகும், அவர் பேச வேண்டும் என மைக் கேட்டதால் அமைதியாக இருக்கும்படி அமைச்சர் கடிந்து கொண்டார்.

அக் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை