அமைச்சர் கனவில் மிதக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் | ADMK MLA'S | Minister Post | TN Crisis | TVK | DMK
யாருடனாவது கூட்டணி அமைத்து, அமைச்சர் ஆகப்போகிறோம் என, புதுச்சேரி ரிசார்ட்டில், அதிமுக எம்எல்ஏக்கள் உற்சாகமாக உள்ளனர். இதுகுறித்து, புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள, அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலில், 47 தொகுதிகளில், அதிமுக வெற்றி பெற்ற போதிலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து உள்ளது. இதனால், அதிமுகவுக்குள் மீண்டும் உட்கட்சி பிரச்னை தலையெடுத்து வருகிறது. இதிலிருந்து, எம்எல்ஏக்களை பாதுகாக்க நினைத்த பழனிசாமி, புதுச்சேரி ரிசார்ட்டில் எங்களை தங்க வைத்திருக்கிறார். அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் போக 35 எம்எல்ஏக்கள் பத்திரமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மூன்று வேளையும் கேட்ட உணவு, நினைத்த நேரம் குளியல் என வெயிலுக்கு இதமாக தங்க வைக்கப்பட்டுள்ளோம்.