/ தினமலர் டிவி 
                            
  
                            /  அரசியல் 
                            / மேயருக்கு எதிராக உள்ள திமுக கவுன்சிலர்களுக்கு திருகு! | DMK | MKStalin | kanchipuram mayor                                        
                                     மேயருக்கு எதிராக உள்ள திமுக கவுன்சிலர்களுக்கு திருகு! | DMK | MKStalin | kanchipuram mayor
காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், தமாக, சுயேட்சை என மொத்தம் 51 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 32 இடங்களை திமுக பிடித்துள்ளது. மேயராக மகாலட்சுமி உள்ளார். ஆரம்பம் முதல் எதிர்கட்சி கவுன்சிலர்கள் மேயரிடம் விரோத போக்கை கடைபிடித்து வந்தனர். இந்த சூழலில் 2 மாதங்களாக சொந்த கட்சி கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். தங்கள் பகுதிகளில் வேலை முறையாக நடப்பதில்லை மற்றும் உட்கட்சி பூசலால் மேயருக்கு எதிராக மோதல் போக்கை கையில் எடுத்தனர். மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும் திமுக உட்பட 33கவுன்சிலர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
 ஜூலை 25, 2024