/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டாக்டர்கள் கண்காணிப்பில் ஸ்டாலின்: அப்போலோ சொல்வது என்ன | MK stalin | apollo hospital
டாக்டர்கள் கண்காணிப்பில் ஸ்டாலின்: அப்போலோ சொல்வது என்ன | MK stalin | apollo hospital
முதல்வர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளதால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்ப்பேட்டை செனடாப் சாலையில் முதல்வர் ஸ்டாலின் வசித்து வருகிறார். தினமும் காலை எழுந்ததும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்றும் வழக்கம்போல நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது வழக்கத்துக்கு மாறாக உடல் சேர்வாக இருந்தது. ஆனாலும், அவர் நடைபயிற்சி செய்தார். அப்போது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. சமாளித்துக் கொண்டு நடைபயிற்சியை முடித்தார்.
ஜூலை 21, 2025