வடமாநில அரசியலுக்காக வானதிக்கு ரேகா வைத்த கோரிக்கை | MLA Vanathi Srinivasan | BJP | Rekha Gupta | De
டில்லியில் கடந்த 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவில் அமோக வெற்றி பெற்ற பாஜ 27 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்தது. அரசியலில் எப்போதும் புதுமையை விரும்பும் பாஜ, டில்லி முதல்வராக ஷாலிமர் பாக் தொகுதி பெண் பாஜ எம்எல்ஏ ரேகா குப்தாவை தேர்வு செய்தது. சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித், ஆதிஷையை தொடர்ந்து டில்லியின் 4வது பெண் முதல்வராக ரேகா குப்தா பொறுப்பேற்றுள்ளார். முதல்வராக பதவியேற்ற பின் ரேகா குப்தா தன் சக அமைச்சர்களுடன், டில்லி யமுனை நதிக்கரைக்கு சென்றார். காசியில் கங்கை நதிக்கு ஆரத்தி எடுப்பது போல், யமுனைக்கும் ஆரத்தி நடத்தினார் ரேகா. இந்த நிகழ்ச்சிக்கு, தமிழக எம்எல்ஏவும், பா.ஜ மகளிர் அணி தலைவியுமான வானதியையும் அழைத்திருந்தார். பா.ஜ தேசிய தலைவர் நட்டா, நீங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என, வானதியிடம் சொன்னாராம். ரேகாவுடன், வானதி ஆங்கிலத்திலேயே பேசினார். சக அமைச்சர்கள், பா.ஜ., தொண்டர்கள் அனைவரும் ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்தனர். வானதிக்கு ஓரளவு இந்தி தெரிந்தாலும் சரளமாக பேச முடியவில்லை. நீங்கள் விரைவில் ஹிந்தி நன்றாக கற்றுக் கொள்ளுங்கள்; அப்போதுதான், வடமாநில அரசியலை நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்றாராம் டில்லி முதல்வர் ரேகா.