உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டிரம்ப் வரி அடாவடிக்கு மத்தியில் இந்தியா - ரஷ்யா தலைவர்கள் பேச்சு Modi - Putin Spoken on Phone

டிரம்ப் வரி அடாவடிக்கு மத்தியில் இந்தியா - ரஷ்யா தலைவர்கள் பேச்சு Modi - Putin Spoken on Phone

ரஷ்ய அதிபருடன் பேசிய மோடி உக்ரைன் போர் குறித்து விவாதம்! பிரதமர் நரேந்திர மோடி - ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் ஆகியோர் போனில் உரையாடினர். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி வித்துள்ளார். ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இச்சூழலில், இந்தியா - ரஷ்யா தலைவர்கள பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இது பற்றி பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, என் நெருங்கிய நண்பர் புடினுடன் நீண்ட பேச்சு நடத்தியதில் மகிழ்ச்சி. உக்ரைன் விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து விளக்கியதற்காக புடினுக்கு நன்றி கூறினேன். இந்தியா - ரஷ்யா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேசினோம். இந்த ஆண்டு அதிபர் புடினின் இந்திய வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆக 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை