உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்; இனிமேல் இப்படித்தான்: மோடி பளிச்

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்; இனிமேல் இப்படித்தான்: மோடி பளிச்

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் உறவை முறிக்கும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அதில் முக்கியமானது 65 ஆண்டுகால சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது. இது தொடர்பாக, டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். சமீப நாட்களாக தண்ணீர் குறித்து மீடியாக்கள் அதிகம் விவாதித்து வருகின்றன. இந்தியாவுக்கு சொந்தமான தண்ணீர் முன்பு, நாட்டிற்கு வெளியே பாய்ந்து கொண்டு இருந்தது. ஆனால், இனிமேல், இந்தியாவின் தண்ணீர் இந்தியாவின் நலனுக்காக பாயும். அது இந்தியாவின் நலனுக்காக பாதுகாக்கப்படும். மேலும், நாட்டின் வளர்ச்சிக்கு முன்னேற்றத்துக்காக பயன்படுத்தப்படும் என்று மோடி தெரிவித்தார். சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்கள் ரத்தம் பாயும் என்றும், தண்ணீரை திசை திருப்பினால், அணைகளை தகர்ப்போம் என்றும் கொக்கரித்த பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி இதன் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

மே 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை