டிரம்பை அலறவிட்ட மோடி தந்திரம்: பகீர் பின்னணி trump modi call decoding | modi birthday | ind vs us
அமெரிக்க அதிபர் டோட்டல் சரண்டர் டிரம்பை அலற விட்ட மோடி தந்திரம்! உலகை முந்திய போன் கால் பின்னால் இருக்கும் ரகசியம் அமெரிக்க அதிபராக முதல் முறை டிரம்ப் பதவி வகித்த போது, இந்தியாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார். உலக தலைவர்களிலேயே முதன்மை நண்பராக மோடியை வைத்திருந்தார். இரு தலைவர்களுக்கும் இடையே தனிப்பட்ட புரிதல் இருந்தது. ஆனால் 2வது முறை அதிபர் ஆன பிறகு டிரம்பின் நடவடிக்கை டோட்டலாக மாறியதை மொத்த உலகமும் கண்கூடாக பார்க்கிறது. டிரம்புக்கு எல்லாமே இப்போது பிசினஸ் தான். போர் வெடிக்கிறது என்றாலும் பிசினஸ் பேசுவார். போர் முடிகிறது என்றாலும் வியாபாரம் பேசுவார். வர்த்தகத்துக்காக எந்த நாட்டையும் பகைக்கலாம். எந்த தலைவரையும் வெறுக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார். அதன் விளைவு தான் இந்தியாவை அமெரிக்காவின் எதிரியாக்கினார். முக்கிய நண்பர் மோடியை வில்லனாக சித்தரித்தார். வர்த்தக காரணத்தை சுட்டிக்காட்டி 25 சதவீதம், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரியை இந்தியாவுக்கு விதித்தார். உலகிலேயே இந்தியாவுக்கு தான் அதிக வரி.