பெருமையடித்த அதிபர் டிரம்ப்; ஜெய்சங்கர் கொடுத்த மாஸ் ரிப்ளை | Modi-Trump | Jaishankar | Lok Sabha
ஜெய்சங்கர் போட்ட Truth Bomb வாயடைத்து போன எதிர்கட்சிகள் பெருமை அடித்த டிரம்புக்கும் பதிலடி ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பழிக்குப்பழியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை வான்வழி தாக்குதல் மூலம் அழித்தது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே மே 7 ம்தேதி போர் மூண்டது. இந்தியாவின் மரண அடி தாங்க முடியாமல் போர் நிறுத்தம் செய்ய கேட்டது பாகிஸ்தான். இந்தியாவும் ஒகே சொல்ல மே 10ம் தேதி போர் முடிவுக்கு வந்தது. ஆனால், இந்தியா -பாகிஸ்தான் போரை தான் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமை அடித்துக் கொண்டார். போரை கைவிட்டு வந்தால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யலாம் என்று சொன்னேன்; உடனே இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டு போரை நிறுத்தி விட்டனர் என டிரம்ப் திரும்பத் திரும்ப கூறினார். ப்ரத் பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் போரை நிறுத்த இந்தியா முன்வந்தது என இந்தியாவும் பலமுறை சொன்னது. இன்று பார்லிமென்ட்டில் சிந்தூர் ஆபரேஷன் தொடர்பாக விவாதம் நடந்தபோது, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு ஏதும் இல்லை என்றார். இன்னும் சொல்லப்போனால், ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரையிலான இடைப்பட்ட காலத்தில் பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் ஒருமுறை கூட பேசிக் கொள்ளவே இல்லை.. அப்படி இருக்க டிரம்ப் எப்படி போரை நிறுத்தியிருக்க முடியும்? என ஜெய்சங்கர் கூறி, எதிர்கட்சிகளின் வாயை அடைத்தார்.