உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலின் vs நயினார் நாகேந்திரன் அறிக்கை போர் | Modi | PM Modi Visit | Nainar Nagenthiran | DMK | CM

ஸ்டாலின் vs நயினார் நாகேந்திரன் அறிக்கை போர் | Modi | PM Modi Visit | Nainar Nagenthiran | DMK | CM

தமிழகம் வருவதையொட்டி அறிக்கை வெளியிட்ட மோடி, ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்து விட்டது என கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், கல்வி நிதி எப்போது வரும்; கவர்னர் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்; தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும் கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும் உட்பட 10 கேள்விகளை கேட்டு இருந்தார் இதற்கு பதில் கேள்வி கேட்டு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது; சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுவதைப் போல, தேஜ கூட்டணியின் வெற்றி தலைவன் வருவதற்கு முன்னே வழக்கம் போல திமுக அரசின் வெற்று புலம்பல் ஒலி தொடங்கி இருக்கிறது! நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக்கோரி தூய்மைப் பணியாளர்கள் போராடிய வேளையில், அவர்களைக் காணாது திரைப்படம் கண்டு களித்ததை யாராவது மறக்க முடியுமா? தினந்தினம் பெண்கள் காமக்கொடூரர்களின் கரங்களில் சிக்கித் தவிக்கும் வேளையில், வெல்லும் தமிழ்ப் பெண்கள் என நாடகம் நடத்தி விளம்பரம் தேடியதை மறக்க முடியுமா? போதையின் பாதையில் இளைஞர்கள் சீரழியும் போது, போதைப் பொருள் புழக்கத்தைத் தடுப்பதைவிட்டு மேடையில் மட்டும் பாடம் எடுத்த கோரத்தை மறக்க முடியுமா? கொடுத்த வாக்குறுதியைப் பறக்கவிட்டு பகுதிநேர ஆசிரியர் கண்ணன் உயிரை பறித்த கொடூரத்தை தான் மறக்க முடியுமா? இப்படிப்பட்ட கொடுங்கோல் ஆட்சியை நடத்திவிட்டு, ஃபோட்டோஷூட்டுக்கு மட்டும் தலைகாட்டும் தங்களின் வெற்று திசைத்திருப்பு ஒப்பாரியை கண்டு மக்கள் மாறப்போவதில்லை! இன்னும் எவ்வளவு கதறினாலும் திமுக இனியொருமுறை அரியணை ஏறப்போவதில்லை என நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். #Modi | #PMModiVisit | #NainarNagenthiran | #DMK | #CMStalin

ஜன 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை