/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முக்கிய துறைகளில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்: மோடி | AI | Modi
முக்கிய துறைகளில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்: மோடி | AI | Modi
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக டெல்லியில், ஏஐ துறையில் பணிபுரியும் நிபுணர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பிரபலமான AI நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகள் , ஐஐடி, ஐஐஐடி நிபுணர்களும் கலந்து கொண்டனர். பிரதமர் பேசும்போது, வெளிப்படையான பாரபட்சமற்ற மற்றும் பாதுகாப்பான AI தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நெறிமுறை பயன்பாட்டில் எந்த சமரசமும் இருக்க கூடாது. ஏஐ தொழில்நுட்பத்தின் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
ஜன 29, 2026