/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ராகுலுக்கு 'செலக்டிவ் அம்னீஷியா' நோய்: விளாசிய பாஜ Rahulgandhi| Congress LoP| Lok Sabha
ராகுலுக்கு 'செலக்டிவ் அம்னீஷியா' நோய்: விளாசிய பாஜ Rahulgandhi| Congress LoP| Lok Sabha
அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். சிகாகோ பல்கலையில் பேசிய அவர், இந்திய ஜனநாயகத்தில் பிரச்னை உள்ளதற்கான ஆதாரம் உள்ளதாக கூறினார். தேர்தல் கமிஷனையும் விமர்சித்தார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு பாஜ செய்தி தொடர்பாளர் சி.ஆர் கேசவன் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவின் தேர்தல் நடைமுறைகள் பற்றி வெளிநாட்டு மண்ணில் ராகுல் பேசும் நச்சு பேச்சுகள், தேர்தலின் நேர்மையை களங்கப்படுத்துகிறது. இந்திய ஜனநாயகத்தின் மீது அவருக்கு உள்ள வெறுப்பு, அரசியல் அமைப்பு மீதான அப்பட்டமான அவமதிப்பையும் காட்டுகிறது.
நவ 19, 2026