ராகுலை வைத்து மோடி செய்த தரமான சம்பவம் | Modi vs Rahul | Modi's foreign police lesson | Modi video
பார்லிமென்ட்டில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி பேசினார். இந்த தீர்மானம் மீது ஏற்கனவே பேசிய எதிர்கட்சி தலைவர் ராகுல் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மோடி பதிலடி கொடுத்தார். குறிப்பாக, பாஜ அரசின் வெளியுறவு கொள்கைகளை கடுமையாக தாக்கி பேசி இருந்தார் ராகுல். டிரம்ப் பதவி ஏற்பு விழாவுக்கு மோடியை அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக மூன்று, நான்கு முறை வெளியுறவு அமைச்சரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்தியாவிடம் இருக்கும் சக்திக்கு அமெரிக்க அதிபரை நம் நாட்டுக்கு வர வைக்க வேண்டும் என்று கூறினார். சீனா விவகாரம் குறித்தும் மோடியை தாக்கி இருந்தார் ராகுல். ராகுலின் வெளியுறவு கொள்கை விமர்சனத்துக்கு மோடி கொடுத்த பதிலடி பார்லியை அதிர வைத்தது.