பழனி பஞ்சாமிர்தம் பற்றி பேசிய இயக்குனர் கைது | Mohan G | Director Mohan
பஞ்சாமிர்தம்.. கருத்தடை மாத்திரை.. இயக்குனர் மோகன் பேசியது என்ன? வீடு புகுந்து தூக்கிய திருச்சி போலீஸ் திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கியவர் மோகன். இவர் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது பற்றி சமீபத்தில் பேசி இருந்தார். அப்போது திருப்பதி லட்டு விவகாரத்துடன், பழனி பஞ்சாமிர்தம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். பழனி பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தக்கூடிய மாத்திரைகள் கலப்பதாக கேள்விப்பட்டேன். அந்த செய்தியை வெளியே வர விடாமல் சரி செய்து பஞ்சாமிர்த சர்ச்சையை வேறு விதமாக முடித்துவிட்டார்கள். ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. கோயில் ஊழியர்களிடம் கேட்டதை வைத்து சொல்கிறேன் என்றார் மோகன். மேலும் தரம் இல்லாத பஞ்சாமிர்தம் பற்றி பழனி கோயில் நிர்வாகம் விளக்கம் கொடுத்தது. ஆனால் என்ன நடந்தது என்பதை பற்றி மக்களுக்கு தெளிவான யாரும் சொல்லவில்லை என மோகன் கூறினார். ஏற்கனவே பழநி பஞ்சாமிர்தம் செய்ய கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக சொன்ன பாஜ நிர்வாகிகள் செல்வகுமார், வினோஜ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இயக்குநர் மோகனும் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டதாக கூறியதால் அவர் மீது திருச்சி போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.