விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி | mr vijayabhaskar | HC
எம்ஆர் விஜயபாஸ்கர் தம்பியை கைது செய்ய ஐகோர்ட் தடை! கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தமது மகளுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், அவர் தம்பி சேகர் உள்ளிட்டோர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விட்டதாக வாங்கல் போலீசில் புகார் கொடுத்திருந்தார். அதனடிப்படையில், விஜயபாஸ்கர், தம்பி சேகர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதியப்பட்டது. முன் ஜாமின் கோரி விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் கோர்ட் தள்ளுபடி செய்தது. சென்னை ஐகோர்ட்டில், விஜயபாஸ்கரும், தம்பி சேகரும் முன்ஜாமின் கோரினர். அரசியல் பழிவாங்கும் நோக்கில் வழக்கு போடப்பட்டு உள்ளதாக கூறியிருந்தனர். இதனிடையே விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். ஜாமின் மனு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு விட்டதால், அவரது முன்ஜாமின் மனு செல்லாது எனக்கூறி நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்தார்.