முடா நில முறைகேடு லோக் ஆயுக்தா போலீஸ் அதிரடி Muda| Siddaramaiah| Karnataka CM | FIR
கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவின் மனைவி பார்வதி. அவருக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் முடா (MUDA) கையகப்படுத்தியது. அரசு திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதால், அதற்கு பதில் பார்வதிக்கு அரசு ரூ.56 கோடி மதிப்புள்ள 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. பார்வதி கொடுத்த நில மதிப்பைவிட அவர் வாங்கிய நில மதிப்பு பல மடங்கு அதிகம் என புகார் எழுந்தது. இப்படி பலருக்கு மாற்று நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. முதல்வர் சித்தராமய்யா மீது வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் கவர்னர் தாவர் சந்த் கெலாட்டிடம் அனுமதி கேட்டனர். விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளித்தார்.