மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு பூமி பூஜை | murugan manadu | Madurai
மதுரையில் குன்றம் காக்க... கோயிலை காக்க என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு ஹிந்து முன்னணி சார்பில் ஜூன் 22ம் தேதி நடக்க உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோயில்களை சீரமைக்க வலியுறுத்தியும், முருக பக்தர்களை ஒன்று திரட்டவும் முயற்சிகள் நடக்கிறது. முருக பக்தர்கள் மாநாடுக்கான அடிக்கல் பூமி பூஜை மதுரை வண்டியூரில் நடந்தது. தொடக்கத்தில் கோ பூஜை நடந்தது. பின்னர் 6.58 மணிக்கு தொடங்கிய பூமி பூஜையில் முகூர்த்தக்கால் நாட்டப்பட்டது.
மே 28, 2025