பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத ஆட்சி | J.P.Nadda slams | Woman assaulted in public | West bengal
மேற்கு வங்கத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ரா என்ற பகுதியில், நடுரோட்டில் மக்கள் மத்தியில் ஒரு பெண் உட்பட இருவரை மற்றொரு நபர் சரமாரியாக அடித்து உதைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தகாத உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தம்பதியை கொடூரமாக தாக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவுகிறது. தாக்கிய நபர் திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் என கூறப்படும் நிலையில், இந்த சம்பவத்திற்கு பாஜ தேசிய தலைவர் நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் இருந்து மம்தா ஆட்சியில் நடக்கும் கொடுமைகளை நினைவுபடுத்தும் கொடூரமான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தொண்டர்கள் இந்த சம்பவத்தை நியாயப்படுத்துவது விஷயத்தை இன்னும் மோசமாக்குகிறது. சந்தேஷ்காலி, உத்தர் தினாஜ்பூர் உட்பட மாநிலத்தில் எந்த இடமாக இருந்தாலும் மம்தா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.