/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமைதியாக இருந்து புயலாக மாறிய நஹிட் இஸ்லாம் | Nahid Islam| | sociology student | PM Hasina
அமைதியாக இருந்து புயலாக மாறிய நஹிட் இஸ்லாம் | Nahid Islam| | sociology student | PM Hasina
15 ஆண்டு ஹசீனா ஆட்சிக்கு END CARD போட்ட மாணவன் இந்தியாவால் தனி நாடானது வங்க தேசம். இன்று அந்த நாட்டில் இடஒதுக்கீடுக்கு எதிரான மாணவர் போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இடஒதுக்கீடுக்கு எதிரான மாணவர் போராட்ட களத்தை சூடு குறையாமல் பார்த்துக்கொண்டவரின் பெயர் நஹிட் இஸ்லாம். 26 வயதான இளைஞர். டாக்கா பல்கலை. சமூகவியல் துறை மாணவர். மென்மையாக பேசக்கூடியவர் என்பதுதான் இவரது இமேஜாக இருந்தது. தலையில் எப்போதும் வங்க தேசத்தின் தேசியக் கொடியை கட்டிக்கொண்டு போராட்டக் களங்களுக்கு வருவதை வாடிக்கையாக கொண்ட இஸ்லாம், இடஒதுக்கீட்டுக்கு எதிராக வலுவான மாணவர் இயக்கத்தை உருவாக்கினார்.
ஆக 06, 2024