/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மக்கள் வயிற்றெரிச்சலே திமுகவை வீழ்த்தும்: பாஜ | omni Bus Loot Nainar Nagendran Public Anger
மக்கள் வயிற்றெரிச்சலே திமுகவை வீழ்த்தும்: பாஜ | omni Bus Loot Nainar Nagendran Public Anger
பாரதிய ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை நேற்று நெல்லையில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பஸ்ஸில் ஒரு நபருக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பொங்கல், தீபாவளி போன்ற அனைத்து பண்டிகை காலங்களிலும், ஆம்னி பஸ் கட்டணம் விண்ணை தொடுவதும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்கள் குறைவாக இயக்கப்படுவதும், கண் துடைப்புக்காக திமுக அமைச்சர்கள் ஆம்னி பஸ் கட்டண உயர்வை எச்சரிப்பதும் தொடர்கதையாகி வருகிறதே தவிர, மக்கள் பணம் சுரண்டப்படுவது நின்றபாடில்லை.
ஜன 19, 2026