தயாநிதி மாறனை தகுதி நீக்கம் செய்ய நாராயணன் திருப்பதி வலியுறுத்தல்! Dayanidhi maran | PM | MODI | BJP
தயாநிதி பண்ணது தேச துரோக குற்றம்! யார் கேடி? 2024 -25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா கடந்த வாரம் தாக்கல் செய்தார். இதில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 27ம் தேதி திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை கலெக்டர் அலுவலகம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தயாநிதி மாறன், தமிழனாக பிறக்கமுடியவில்லையே என பிரதமர் மோடி வருத்தப்பட்டார். ஆனால் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு கேடி மோடி நிதி ஒதுக்கவில்லை என விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜ துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேடி என்று மோடியை சொல்கிறார் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன். யார் கேடி? சட்ட விரோதமாக 764 தொலைபேசி இணைப்புகளை தனது வீட்டில் இணைத்து கொண்டு சட்ட விரோத தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி, பல கோடி ரூபாய் அரசாங்கத்தின் பணத்தை கொள்ளையடித்த கொள்ளைக்கார கூட்டம் பிரதமரை கேடி என்று சொல்வது அயோக்கியத்தனம். முதல்வர் ஸ்டாலினை இது போன்று பேசியிருந்தால் தமிழக காவல் துறை அடுத்த நொடியே கைது செய்து சிறையில் அடைத்திருக்கும். பிரதமர் குறித்து இந்த வார்த்தையை பிரயோகம் செய்தது குற்றச் செயல் மட்டுமல்ல, அரசுக்கு எதிரான, தேசத்துக்கு எதிரான குற்றம்.