பாஜ, அதிமுக சொல்லும் இருவேறு விஷயங்கள் | EPS | EPS Delhi Visit | Amitsha | NDA Alliance | Seat Shari
அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய நேற்று டில்லி சென்றார். அமித்ஷாவிடம் ஆலோசனை நடத்த மூன்று மாதங்களில் மூன்றாவது முறையாக டில்லி சென்றுள்ளார். நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த சந்திப்பில், தொகுதி பங்கீடு தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் மாற்றப்பட்டது போல, தமிழகத்திலும் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அமித்ஷாவிடம் வைக்க விருக்கிறார் என அதிமுக வட்டாரங்கள் கூறின. தமிழக பாஜ தலைவர்களுடன் தொகுதி பங்கீட்டு பேச்சை தவிர்க்கவே, பழனிசாமி டில்லி சென்றுள்ளதாக பாஜ வட்டாரங்களில் கூறுகின்றனர். 40 தொகுதிகளை பாஜ கேட்கும் நிலையில் 29 தொகுதிகள் தர பழனிசாமி முன்வந்துள்ளதாக தெரிகிறது. #EPS | #EPSDelhiVisit | #Amitsha | #NDAAlliance | #SeatSharing | #ADMK | #2026Election | #ElectionUpdate | #TNElection2026 #TamilNaduPolitics #Election2026 #PoliticalDebate #PoliticalStrategy #TamilNaduElections #AlliancePolitics #VoterEngagement #ElectionAnalysis #PoliticalNews #CurrentAffairs #SouthIndianPolitics #NDAvsDMK