தமிழகம் முழுவதும் சூடு பிடிக்கும் தேர்தல்களம்! BJP | ADMK | NDA Alliance
தமிழக சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடக்க உள்ளது. இதில் நான்கு முனைப் போட்டி உருவாகி உள்ளது. ஒவ்வொரு கூட்டணியில் உள்ள கட்சிகளும், தங்களுக்கு ஆதரவு கேட்டு, மக்களிடம் பிரசாரத்தை துவக்கி உள்ளன. அந்த வரிசையில், டில்லியில் மோடி, தமிழகத்தில் எடப்பாடி; உங்கள் தொகுதியில் தாமரை என்ற வாசகத்துடன், பாஜ பிரசாரத்தை துவக்கி உள்ளது. அந்த கட்சி போட்டியிட எதிர்பார்க்கும் தொகுதிகளில், இந்த வாசகங்களை வைத்து சுவர் விளம்பரம் செய்து வருகிறது. சென்னையில் பா.ஜ. போட்டியிட விரும்பும் தொகுதிகளில் ஒன்றான வேளச்சேரியில், டில்லியில் மோடி, தமிழகத்தில் எடப்பாடி; வேளச்சேரியில் தாமரை என சுவர் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல், மாநிலம் முழுதும் பா.ஜ. பிரசாரம் செய்து வருகிறது.
பிப் 22, 2026