உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? | NDA Parliamentary party meeting | PM Modi

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? | NDA Parliamentary party meeting | PM Modi

பாஜ கூட்டணி எம்.பிக்களுக்கு மோடி சொன்ன மந்திரம்! 18வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது. 2 நாட்களாக ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. எதிர்கட்சிகள் நீட்தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றனர். இதனால் லோக்சபாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் அனல் பறக்கும் விவாதம் நடக்கிறது. இந்த பரபரப்பான சூழலில் பார்லிமென்ட் வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்களின் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள். தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள் மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும். நேருவுக்கு பிறகு எந்த பிரதமரும் தொடர்ந்து 3 முறை வெற்றி பெறாத நிலையில், ஒரு டீ விற்றவர் அந்த சாதனை செய்ததை ஏற்க முடியாமல் காங்கிரஸ் தவிக்கிறது. லோக்சபாவில் ராகுலை போல் செயல்படாதீர்கள். தகவல்களை சரிபார்த்து பேசுங்கள்; ஊடகங்களில் தேவையற்ற விமர்சனங்களை தவிருங்கள் என்றும் எம்பிக்களிடம் கூறினார்.

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை