உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 425 கிலோ எடையில் ஆன புதிய வெள்ளித் தேர் வெள்ளோட்டம் | Nellaiyappar Temple | Nellaiyappar chariot

425 கிலோ எடையில் ஆன புதிய வெள்ளித் தேர் வெள்ளோட்டம் | Nellaiyappar Temple | Nellaiyappar chariot

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில். இங்கு 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த தீ விபத்தில் வெள்ளி தேர் தீக்கிரையானது. மீண்டும் வெள்ளி தேர் கொண்டு வர பக்தர்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்தனர். 2023ல் சட்டசபையில் அறநிலைய துறை மானிய கோரிக்கையின் போது வெள்ளி தேர் அமைக்கும் அறிவிப்பு வெளியானது. 2024 பிப்ரவரியில் தேர் செய்யும் பணி தொடங்கி 2025 டிசம்பரில் நிறைவு பெற்றது. 18 அடி உயரத்தில் மரத்திலான தேர் செய்யப்பட்டு 429 கிலோ வெள்ளி தகடுகள் பொருத்தினர். மொத்தம் 3.95 கோடி மதிப்பீட்டில் தேர் தயார் ஆனது. 2 குதிரைகள், பிரம்மன் மற்றும் ஆகம விதிப்படியான சிற்பங்களுடன் வெள்ளி தேர் உருவாக்கப்பட்டது.

ஜன 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை