சிபிஐ விசாரணை எதிர்த்தவர் இப்போது கேட்கிறார்
நகர்புற வளர்ச்சி அமைச்சர் நேருவின் அறிக்கை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடத்தி உள்ளனர். 7 ஆண்டுக்கு முன் அதே இடத்தில் 2017 மார்ச் 8 ல் ஜெயலலிதா மரணத்திற்கு சபிஐ விசாரணை கோரி பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் இருந்தார். அது பழனிசாமிக்கு நினைவிருக்கிறதா? ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டவர் பழனிசாமி. அதிமுக ஆட்சியில் 4,800 கோடிக்கு நெடுஞ்சாலை டெண்டர் ஊழல் நடந்தது. திமுக புகார் கொடுத்தும் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுக்காததால் ஐகோர்ட்டுக்கு போனது.
ஜூன் 28, 2024