ஹெஸ்புலாவை ஒரே வீடியோவில் கதற விட்ட நெதன்யாகு | Israel vs Hezbollah | Netanyahu new video
இஸ்ரேலின் முழு ஆட்டம் ஆரம்பம் ஹெஸ்புலாவை கருவறுப்போம் நெதன்யாகு நெத்தியடி காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஓராண்டுக்கு மேல் இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. காசாவில் 42 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் ஹமாஸ் பயங்கரவாதிகள் மட்டும் 18 ஆயிரம் பேர். கிட்டத்தட்ட ஹமாஸ் கட்டமைப்புகளை தகர்த்து வீட்ட நிலையில், லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புலா பயங்கரவாதிகள் பக்கம் இஸ்ரேல் கவனம் திரும்பி உள்ளது. 4 வாரமாக படிப்படியாக தாக்குதலை தீவிரப்படுத்தி வந்த இஸ்ரேல் இப்போது முழு அளவிலான போரை அறிவித்துள்ளது. முதலில் தெற்கு லெபனானிலும், லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலும் வான்வழி தாக்குதலை நடத்தியது. பின்னர் தெற்கு லெபனானில் ஆயிரக்கணக்கான துருப்புகளை அனுப்பி தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது. லெபனானில் இதுவரை 2100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 லட்சம் பேர் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்து விட்டனர்.