உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பொங்கி எழுந்து பாஜ வியூகத்தில் சிக்கிய திமுக | Delimitation Explained | DMK | ADMK | BJP |

பொங்கி எழுந்து பாஜ வியூகத்தில் சிக்கிய திமுக | Delimitation Explained | DMK | ADMK | BJP |

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடியேற்றி, தொகுதி மறுவரையறை திட்ட நகலை எரித்து போராட்டம் நடத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். நடப்பது சட்டசபை தேர்தல். ஆனால் லோக்சபா தொகுதி மறுவரையறையை ஓர் ஆயுதமாக தன் கையில் எடுத்திருக்கிறது திமுக. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் பிரசாரம் எடுபடும் அளவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் எடுபடவில்லை. திமுகவின் வியூக வகுப்பு குழு இப்படி அறிக்கை கொடுத்ததால் பிரசாரத்தை தீவிரப்படுத்த யோசித்து கொண்டிருந்தது திமுக. இந்த சூழலில் லட்டு போல தொகுதி மறுவரையறை விஷயத்தை கொடுத்தது பாஜ. அதற்கான மசோதா நேற்று தாக்கலாகும் என்ற தகவல் முதலில் வெளியான உடனேயே, ‛தமிழகத்தை பாதிக்கும் படியோ வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமை கூட்டும்படியோ, தொகுதி வரையறை நடந்தால், சும்மா இருக்கமாட்டோம். தமிழகம் தன் எதிர்ப்பை கடுமையாக காட்டும். இதுவரை பார்க்காத தமிழகத்தை பார்க்கவேண்டியிருக்கும். பழைய திமுக வை மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் உடனடியாக எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து தொகுதி மறுவரையறை என்பது சொந்த நாட்டிலேயே தமிழர்களை அகதிகளாக மாற்றும் கருப்புச்சட்டம் என கூறி தமிழகம் முழுவதும் நேற்று திமுகவினர் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தொகுதி வரையறை தி்ட்ட நகலை எரித்து போராட்டம் நடத்தினர். #Delimitation | #DMK | #ADMK | #BJP | #NewDelimitationBill | #LokSabhaSeats | #WomensReservation | #Congress | #PMModi | #Amitsha | #Parliament | #ParliamentNewBill | #NewBill | #DelimitationControversy | #Reservationforwomen

ஏப் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !