உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழக அதிகாரிக்கு மறுப்பு; சேகர்பாபு வாக்குவாதம்!

தமிழக அதிகாரிக்கு மறுப்பு; சேகர்பாபு வாக்குவாதம்!

தமிழக அதிகாரிக்கு மறுப்பு; சேகர்பாபு வாக்குவாதம்! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வரவு, செலவு கணக்குகள் சுவாமியிடம் சமர்பிக்கும் ஆனி வார ஆஸ்தானம் விழா பாரம்பரியமாக நடக்கிறது. சம்பிரதாய முறைப்படி ஏழுமலையான் கோயிலில் ஆனி கடைசி நாளில் வரவு, செலவு கணக்குகள் பெருமாள் முன் படிக்கப்படும். பின்னர், பெருமாளுக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்படும். இந்த சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களிடமிருந்து தலா 1 ரூபாய் பெறப்பட்டு புதிய ஆண்டுக்கான கணக்கு தொடங்கப்படும். இந்த ஆண்டுக்கான ஆனி வார ஆஸ்தான தினம் இன்று நடந்தது. இவ்விழாவுக்கு தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு மட்டும் தேவஸ்தானம் அனுமதி அளித்தது. அதன்பேரில் திருப்பதிக்கு செல்ல முயன்ற தமிழக அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது அறநிலையத்துறை அதிகாரி மாரியப்பனுக்கு பாஸ் இருப்பதால் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டுமென, உடன் சென்ற அமைச்சர் சேகர்பாபு வாக்கு வாதம் செய்தார். இணை ஆணையர் மாரியப்பனை அனுமதிக்காமல் உள்ளே செல்ல மாட்டேன் என சேகர்பாபு அடம் பிடித்தார். சேகர் பாபு வலியுறுத்தலை அடுத்து அதிகாரி மாரியப்பன் கோயிலுக்குள் செல்ல அனுமதி அளித்தனர்.

ஜூலை 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி