உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வாழ்வாதாரம் பாதிப்பதாக வியாபாரிகள் கண்ணீர் | MGR Market | Stagnant rainwater | Full of mud | Coimbat

வாழ்வாதாரம் பாதிப்பதாக வியாபாரிகள் கண்ணீர் | MGR Market | Stagnant rainwater | Full of mud | Coimbat

வாழ்வாதாரம் பாதிப்பதாக வியாபாரிகள் கண்ணீர் | MGR Market | Stagnant rainwater | Full of mud | Coimbatore | கோவையின் பிரதான காய்கறி மார்க்கெட்களில் ஒன்று, மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனியில் அமைந்துள்ள எம்ஜிஆர் மார்க்கெட். இங்கு 100க்கும் மேற்பட்ட கடைகள் இயங்குகின்றன. இங்கு கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. எப்போதும் பிசியாக இருக்கும் கோவையின் முக்கியமான காய்கறி மார்கெட்டின் நிலை, மழை சமயங்களில் தலைகீழாக மாறிவிடுகிறது. இங்கு மழை தடுப்பு ஷீட்கள் எதுவும் இல்லாமல் திறந்தவெளியாக இருப்பதால் மழை பெய்யும் பொழுதெல்லாம் மண் தரையில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. சமீபத்தில் அரபிக்கடலில் உருவாக காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கோவையில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கோவை எம்ஜிஆர் மார்கெட் முழுதும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. கால் வைக்கும் இடமெல்லாம் கால்கள் புதையும் அளவிற்கு சேறும் சகதியுமாக இருப்பதால் வியாபாரிகள், லோடு இறக்கி ஏற்றும் தொழிலாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். காய்கறிகள் இறக்கி ஏற்ற வரும் வாகனங்கள் சில சமயம் சேற்றில் மாட்டி கொள்வதால் வியாபாரிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து தேங்குவதால் காய்கறிகள் அதில் நனைந்து சுகாதார கேடு ஏற்படுவதாகவும், மாநகராட்சி நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மே 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை