தேர்தலில் திமுகவை எதிர்கொள்ள அதிமுகவின் அடுத்த யுத்தி
தேர்தலில் திமுகவை எதிர்கொள்ள அதிமுகவின் அடுத்த யுத்தி தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. திமுக அரசு பல திட்டங்களை அறிவித்து மக்களை தன் பக்கம் ஈர்க்க முயற்சித்து வருகிறார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து திமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டி வருகிறார். அடுத்ததாக திமுக மற்றும் கூட்டணி எம்பிக்கள் மக்களுக்கு என்ன செய்தனர் என்பதை வெளிச்சம் போட்டு காட்ட அதிமுக திட்டமிட்டு உள்ளது. திமுக கூட்டணி எம்பிக்கள் பார்லிமென்டில் எப்படி செயல்பட்டனர்; எத்தனை கேள்விகள் கேட்டனர்; தொகுதி மக்களுக்கு என்ன செய்தனர்; டிஆர் பாலு-கனிமொழி இடையே என்ன பிரச்னை; உதயநிதி ஆதரவு எம்பிக்கள், மற்ற திமுக எம்பிக்கள் இடையே உள்ள பிரச்னைகள் என பல விவரங்களை வெளியிட அதிமுக திட்டமிட்டுள்ளது. இந்த ரிப்போர்ட்டை ரெடி செய்யும் பணியில் டெல்லி அதிமுக மம்முரமாக ஈடுபட்டு இருக்கிறது. அந்த விவரங்களை சிறிய கையேடு புத்தகமாக அச்சிட்டு பிரசாரத்தின்போது மக்களுக்கு விநியோகிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.