/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஐஎப்எஸ் அதிகாரி நிதி திவாரியின் பின்னணி | Nidhi Tewari | IFS Officer | PM Private Secretary
ஐஎப்எஸ் அதிகாரி நிதி திவாரியின் பின்னணி | Nidhi Tewari | IFS Officer | PM Private Secretary
பிரதமர் மோடியின் தனி செயலராக இளம் பெண் ஐஎப்எஸ் அதிகாரியான நிதி திவாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2014 பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரியான நிதி திவாரி உபி வாரணாசி அருகே உள்ள மெஹ்முர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு வரும் முன் வணிக வரி துறையில் துணை ஆணையராக பணியாற்றினார். தனது பணியை தொடர்ந்து கொண்டே சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார். 2013 சிவில் சர்வீஸ் தேர்வில் 96 வது ரேங்க் எடுத்தார். ஐஎப்எஸ் பயிற்சியின் போது சிறந்த பயிற்சி அதிகாரிக்கான கோல்டு மெடல் வாங்கியுள்ளார்.
மார் 31, 2025