உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பட்ஜெட் தாக்கலில் நிர்மலா படைத்த புது வரலாறு | Nirmala | Budget 2024

பட்ஜெட் தாக்கலில் நிர்மலா படைத்த புது வரலாறு | Nirmala | Budget 2024

2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா தாக்கல் செய்தார். 2019ல் இருந்து நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா தாக்கல் செய்த 7வது பட்ஜெட் இதுவாகும். 6 முறை முழு பட்ஜெட்டும், 1 முறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் தொடர்ந்து 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்த மொரார்ஜி தேசாய் சாதனையை நிர்மலா முறியடித்துள்ளார். மொரார்ஜி தேசாய் 1959 முதல் 1964 வரை நிதி அமைச்சராக இருந்துள்ளார். இது தவிர 2020 பட்ஜெட் தாக்கலின் போது 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு நிர்மலா உரையாற்றினார். இதுவே பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் ஒருவர் நிகழ்த்திய உரைகளில் மிக நீளமானதாகும்.

ஜூலை 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ