/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நிர்மலா சீதாராமன் சொன்ன தீர்க்கமான பதில் | Nirmala Sitaraman | Finance Minister | 2024-25 Budget
நிர்மலா சீதாராமன் சொன்ன தீர்க்கமான பதில் | Nirmala Sitaraman | Finance Minister | 2024-25 Budget
அரசு வருவாயை பெருக்க என்ன பண்ணுவீங்க மேடம் ? மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுபோன்ற சில மாற்றங்களால் அரசுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இதை சுட்டிக்காட்டி, இந்த இழப்பை சரிக்கட்டி அரசின் வருவாயை பெருக்க என்ன செய்வீர்கள்? என நிர்மலா சீதாராமனிடம் ஒரு நிருபர் கேட்டார். அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், அரசின் வருவாய் என்பது வரிகளால் மட்டும் கிடைப்பது இல்லை; வரிகள் அல்லாத வேறு சில வுழிகளிலும் அரசுக்கு வருவாய் வருகிறது என விளக்கிக் கூறினார்.
ஜூலை 23, 2024