உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் | Nirmala Sitharaman | Finance

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் | Nirmala Sitharaman | Finance

18-வது லோக்சபாவின் முதல் கூட்ட தொடர் ஜூன் 24ல் தொடங்கி ஜூலை 3 வரை நடைபெற்றது. பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் வரும் 22-ம்தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுமதி வழங்கி இருக்கிறார். வரும் 23-ம்தேதி நடப்பு நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என பார்லிமென்ட் விவகாரத்துக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். 23ம்தேதி அவர் தாக்கல் செய்வது முழு பட்ஜெட். பிரதமர் மோடி தலைமையில் தொடர்ச்சியாக 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்தபிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். இதுவரை 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதராமன், 23-ம்தேதி ஏழாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

ஜூலை 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !