வேலையை சீக்கிரம் முடிக்க பீகார் முதல்வர் செய்த காரியம் nitish kumar| Bihar cm| JP ganga express way
பீகார் தலைநகர் பாட்னாவில் நதிகளால் பிரிக்கப்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு நகரங்களை இணைக்கும் வகையில் ஜேபி கங்கா எக்ஸ்பிரஸ் வே jp ganga சாலை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது இத்திட்டத்தின் நோக்கம். 3ம் கட்டமாக 3.4 கிலோ மீட்டர் சாலை பணிகள் முடிந்து அதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட முதல்வர் நிதிஷ்குமார், சாலை மேம்பாட்டு பணிகள் துறை ஐஏஎஸ் அதிகாரியை பார்த்து, நீங்க விரும்பினால் உங்க கால்ல கூட விழுகிறேன். தயவு செய்து சாலை பணிகளை சீக்கிரம் முடியுங்கள் என்று கைகளை கூப்பியபடி அதிகாரி காலை தொட போனார். அனைவர் முன்னிலையில் முதல்வர் நிதிஷின் இந்த செயலை பார்த்து ஐஏஎஸ் அதிகாரி அதிர்ந்து போய்விட்டார். சார், அப்படியெல்லாம் செய்யாதீங்க என்று சொல்லியபடியே, அந்த அதிகாரி சில அடிகள் பின்வாங்கினார்.