இண்டி கூட்டணி கட்சிகள் எடுத்த அதிரடி முடிவு | No confidence motion | Rajya Sabha | Jagdeep Dhankhar
எல்லை மீறும் பாரபட்சம் ராஜ்யசபா தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ல் தொடங்கியது. முதல் நாளில் இருந்தே எதிர்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கி வருகின்றன. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ராஜ்யசபா தலைவராகவும் இருக்கிறார். நடப்பு கூட்டத்தொடரில் தன்கருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே தினமும் மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அதானி முறைகேட்டை அவையில் எழுப்ப தன்கர் அனுமதி மறுப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அப்படி இருக்கையில் நேற்று அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டை எழுப்ப ஆளுங்கட்சியினருக்கு அனுமதி அளித்தார். இது எதிர்க்கட்சிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே ஜக்தீப் தன்கரை பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.