உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பேசிக்கொண்டிருந்தபோதே ரத்தம் கொட்டியதால் பரபரப்பு | H.D.Kumaraswamy | Nose bleeding

பேசிக்கொண்டிருந்தபோதே ரத்தம் கொட்டியதால் பரபரப்பு | H.D.Kumaraswamy | Nose bleeding

உடன் இருந்தவர்கள் அவரை அங்கிருந்து அழைத்து சென்று, ஜெயநகரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குமாரசாமிக்கு மருத்துவ பரிசோதனைகள் நடக்கிறது. குமாரசாமியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்ததற்கு அவர் எடுத்து கொள்ளும் Blood Thinner மாத்திரை தான் காரணம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. குமாரசாமிக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. உடலில் ரத்தம் உறைந்தால் நெஞ்சுவலி, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதனை தடுக்கவும், ரத்தம் உறைவதை கட்டுப்படுத்தவும் Blood Thinner மாத்திரைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. அந்த வகையில் குமாரசாமி Blood Thinner மாத்திரை எடுத்து கொண்ட நிலையில், ரத்தம் மூக்கின் வழியாக கசிந்துள்ளதாக அவரது கட்சியினர் கூறுகின்றனர். இருப்பினும் மருத்துவர்கள் அதனை உறுதி செய்யவில்லை.

ஜூலை 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை